என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் தடியடி
நீங்கள் தேடியது "போலீஸ் தடியடி"
அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதை தடுக்க சென்ற போலீசார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெறுவதாக கிராமமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல் துறையிடம் முன்அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் எருது விடும் விழாவிற்காக சுமார் 300 காளைகள் அழைத்து வரப்பட்டன. மேலும் விழாவை காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களிடம் இங்கு எருது விடும் விழா நடத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே விழா நடத்த கூடாது என்று கூறினர். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.
ஆனால் இளைஞர்களோ செல்ல மறுத்து போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தாங்கள் கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.
இதனால் இளைஞர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த சிலரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றார்கள். கடந்த ஆண்டும் இதே போல எருது விடும் விழாவின் போது மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

சபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. #Sabarimala #SabarimalaProtests
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண் பக்தர்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கேரளாவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 17-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு 50 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நிலக்கல், பம்பை, பத்தனம் திட்டா போன்ற பகுதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பல பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.
நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. மேலும் 10-க்கும் மேற்பட்ட பக்தர்களின் வாகனங்களும் கல்வீச்சில் உடைந்தன. இது தொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச இந்து பரிஷத் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடை பெற்றது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன, பஸ்களும் ஓடவில்லை. நேற்றும் சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினார்கள்.
பம்பையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் பந்தளம் ராஜ குடும்ப கட்டிடம் முன்பு சரண கோஷ போராட்டம் நடைபெற்றது. சபரிமலை ஆச்சாரத்தை மீறக்கூடாது என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
சபரிமலை கோவில் தந்திரி ராகுல் ஈஸ்வரர் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து போராட்டம் நடத்திய மன்னர் குடும்பத்தினர் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
சபரிமலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நிலக்கல், பம்பை, இலவங்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு வருகிற 22-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
தொடர்ந்து சபரிமலை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு இன்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #Sabarimala #SabarimalaProtests
அரக்கோணத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். #ArakkonamRailBlockade
அரக்கோணம்:
அரக்கோணம்- சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தவண்ணம் உள்ளனர். சரிசெய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தபிறகும், ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர்.
அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு மின்சார ரெயில் நீண்ட நேரமாக வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ரெயில் சரியான நேரத்தில் வந்து செல்லும் ரெயில்வே அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து வரும் மின்சார ரெயில் தாமதமானதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள், திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அரக்கோணம் ரெயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #ArakkonamRailBlockade
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். #SterliteProtest #ThoothukudiFiring
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னர் அரசு மருத்துவமனை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. #SterliteProtest #ThoothukudiFiring

அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னர் அரசு மருத்துவமனை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. #SterliteProtest #ThoothukudiFiring
தூத்துக்குடியில் இன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite

இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின் தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.
ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விவிடி சிக்னல் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பேரிகார்டுகள் அமைத்தும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். போலீஸ் வாகனத்தையும் கவிழ்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதேபோல் போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை. #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்.
விவிடி சிக்னல் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பேரிகார்டுகள் அமைத்தும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். போலீஸ் வாகனத்தையும் கவிழ்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதேபோல் போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை. #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
×

X